அவர்கள் கோரியிருந்தனர், அதனால்தான் முதல்வர் கோரிக்கை விடுத்தார்... அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

பத்திரிகையாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மும்மொழி கொள்கை குறித்தும், முதல்வரின் ட்விட்டர் பதிவு குறித்தும் கூறியுள்ளார்.

jayakumar

இதுகுறித்து அவர் பேசுகையில்,தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் இருக்கும், இதில் இருந்து பின்வாங்க மாட்டோம். இந்தியை எந்த வடிவத்திலும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது. இதுதான் அரசின் கொள்கை என்று கூறிய அவர், இந்தி தொடர்பான சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் நீக்கினார். முதல்வர் கூறிய கருத்து அரசியலாக்கப்பட்டுள்ளது. தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் முதல்வர் அவ்வாறு ட்வீட் செய்தார்.

டெல்லி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தமிழ் கற்றுத்தர போதிய ஆசிரியர்கள் இல்லை. பிறமாநிலங்களிலுள்ள குழந்தைகள் தமிழை விருப்ப பாடமாக படிக்க அவர்களது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் அதனால்தான் முதல்வர் அவ்வாறு பதிவிட்டிருந்தார்.

admk Edappadi Palanisamy jayakumar Tweets
இதையும் படியுங்கள்
Subscribe