Advertisment

நான் விசுவாசி கிடையாது... நான் திரும்பித் தர மாட்டேன்... எஸ்.வி.சேகர் பதில்

s.ve.shekher   jayakumar

அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது அவரிடம், ''அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள்'' என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

அதற்கு ஜெயக்குமார், ''மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா இவரை அடையாளம் காட்டினார். அந்தத் தொகுதியில்அ.தி.மு.க.கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினார், அண்ணா பெயரைச் சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார்.உண்மையிலேயேஎஸ்.வி.சேகர் மானம், ரோஷம், சூடு உள்ளவராக இருந்தால், அந்த ஐந்து வருட சம்பளத்தைத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும். அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினேன். இந்தச் சம்பளம் எனக்குத் தேவையில்லை என்று அரசிடம் திரும்பக் கொடுத்திட வேண்டும். இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்சன் கொடுக்கப் படுகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்சன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கும் அவரை பதில் சொல்லச் சொல்லுங்கள்'' எனக் கூறியிருந்தார்.

Advertisment

அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிக்குப் பிறகு எஸ்.வி.சேகர் ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார்.

அதில், நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் சொந்தசகோதரனைப் போல என்னைப் பார்த்துக் கொண்டார். ஒருவேளை அவர் இந்தச் சம்பளத்தை வாங்காதப்பான்னு சொல்லியிருந்தால் நான் வாங்கியிருக்கப் போவதில்லை. அதை நீங்க எப்படிச் சொல்ல முடியும். அவுங்களுக்கு முன்பு நீங்க, நான் எல்லோரும் ஒரே மாதிரிதான். இப்பஎப்படி திடீர்ன்னு நீங்க ஒரு படி மேலே ஆயிட முடியும்.

மக்களின் கருதுக்களை உங்களிடம் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக நேற்றைய வீடியோவைப் பயன்படுத்திக் கொண்டேனே தவிர, நான் மூன்றாம் தர அரசியல் செய்பவன் அல்ல. அதனால் நீங்கள் தி.மு.க.வைவிட வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்றால், பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று இருந்தால் நான் சொன்ன விசயங்கள் ரைட்.

அதலாம் இல்லை. கூட்டணி இல்லை. ஒன்றும் இல்லை. நாங்கள் எங்கள் இஷ்டம்போல பண்ணுவோம் எனச் சொல்லுங்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். அவ்வளவுதான். நீங்கள் இவ்வளவு கொந்தளிக்க வேண்டியதில்லை.

நான் யாருக்குமே விஸ்வாசி கிடையாது. ஒரு தடவை நமது எம்ஜிஆரில் அம்மாவின் உண்மை விஸ்வாசி என போட்டதற்கு நான் பணம் தரமாட்டேன் என்று சொன்னேன். எழுதிக் கொடுக்காத வார்த்தையைப் போடக் கூடாது. அப்படியென்றால் நான் 30 ஆயிரம் பணம் கட்ட மாட்டேன் என்று சொன்னேன். இது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

நிறைய பேர் அம்மா இருக்கிற வரைக்கும் அம்மா முகத்த நிமிந்துக்கூட பார்த்தது கிடையாது. பாதங்களை மட்டுமே பார்த்து வணங்கி பலன்களை அனுபவித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களுக்கு இவ்வளவு கோபம் தேவையில்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை.

எம்.எல்.ஏ. சம்பளம், ஓய்வூதியம் நான் திரும்பித் தர மாட்டேன். அது என் உழைப்புக்கு அரசு கொடுத்த கௌரவம். அ.தி.மு.க. கட்சியில் வவுச்சர் போட்டு காசு வாங்கின மாதிரி சொல்றீங்க. தேர்தல் நேரத்தில் எனக்கு கொடுத்த பணத்துக்கு வவுச்சர் போட்டு கொடுத்தவன் நான். நீங்க யாராவது ரெக்கமன்ட் பண்ணி எனக்கு சீட் கிடைச்சதா? பணமே கட்டாமல் எனக்கு எலெக்சன்ல சீட் கொடுத்தது ஜெயலலிதா.

நீங்க நினைச்சா திடீன்னு அவுங்கள தூக்கி சுமப்பீங்க. வேண்டாம் என்றால் தொப்புன்னு போட்டு, ஸ்டாலின் வழிதான் என் வழி என்று போனீங்கன்னா, எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கரோனா ஆரம்பத்தில் நீங்கள் செய்ததைத் பார்த்து தேர்தலில் 120 சீட்டுக்கு மேலே வரும் என்றார்கள். இப்ப என்ன கணிப்பு இருக்கிறது என்று நீங்கள்தான் பார்த்துக் கொள்ளணும். கணிப்பு மாறிக்கொண்டே இருக்கும். உங்கள் வெற்றி தோல்வி மக்கள் கையில் உள்ளது. 100 ஓட்டில் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள். 10 ஓட்டில் தோற்றவர்களும்இருக்கிறார்கள்.

http://onelink.to/nknapp

ஒரு ஆன்மீக அரசியலாக, ஒரு கட்சியாக அ.தி.மு.க. இருந்தால், மாறினால் உங்களுக்கு நல்லது. கூட்டணியில் இருக்கிறோம் என்று சொன்னால் நமக்கு நல்லது. இல்ல இல்ல உங்கள சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் காலம் பதில் சொல்லும் 2021. என்ன இருந்தாலும் நீங்கள் என்னுடை அருமை நண்பர் ஜெயக்குமார். டென்ஷன் ஆகாதீங்க. இவ்வாறு கூறியுள்ளார்.

admk MLA minister jayakumar s.v. sekar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe