Skip to main content

நான் விசுவாசி கிடையாது... நான் திரும்பித் தர மாட்டேன்... எஸ்.வி.சேகர் பதில்

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

s.ve.shekher   jayakumar

 

அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ''அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள்'' என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.  

 

அதற்கு ஜெயக்குமார், '' மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா இவரை அடையாளம் காட்டினார். அந்தத் தொகுதியில் அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினார், அண்ணா பெயரைச் சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். உண்மையிலேயே எஸ்.வி.சேகர் மானம், ரோஷம், சூடு உள்ளவராக இருந்தால், அந்த ஐந்து வருட சம்பளத்தைத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும். அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினேன். இந்தச் சம்பளம் எனக்குத் தேவையில்லை என்று அரசிடம் திரும்பக் கொடுத்திட வேண்டும். இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்சன் கொடுக்கப் படுகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்சன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கும் அவரை பதில் சொல்லச் சொல்லுங்கள்'' எனக் கூறியிருந்தார்.

 

அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிக்குப் பிறகு எஸ்.வி.சேகர் ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார். 

 

அதில், நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் சொந்த சகோதரனைப் போல என்னைப் பார்த்துக் கொண்டார். ஒருவேளை அவர் இந்தச் சம்பளத்தை வாங்காதப்பான்னு சொல்லியிருந்தால் நான் வாங்கியிருக்கப் போவதில்லை. அதை நீங்க எப்படிச் சொல்ல முடியும். அவுங்களுக்கு முன்பு நீங்க, நான் எல்லோரும் ஒரே மாதிரிதான். இப்ப எப்படி திடீர்ன்னு நீங்க ஒரு படி மேலே ஆயிட முடியும். 

 

மக்களின் கருதுக்களை உங்களிடம் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக நேற்றைய வீடியோவைப் பயன்படுத்திக் கொண்டேனே தவிர, நான் மூன்றாம் தர அரசியல் செய்பவன் அல்ல. அதனால் நீங்கள் தி.மு.க.வைவிட வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்றால், பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று இருந்தால் நான் சொன்ன விசயங்கள் ரைட். 

 

அதலாம் இல்லை. கூட்டணி இல்லை. ஒன்றும் இல்லை. நாங்கள் எங்கள் இஷ்டம்போல பண்ணுவோம் எனச் சொல்லுங்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். அவ்வளவுதான். நீங்கள் இவ்வளவு கொந்தளிக்க வேண்டியதில்லை. 

 

நான் யாருக்குமே விஸ்வாசி கிடையாது. ஒரு தடவை நமது எம்ஜிஆரில் அம்மாவின் உண்மை விஸ்வாசி என போட்டதற்கு நான் பணம் தரமாட்டேன் என்று சொன்னேன். எழுதிக் கொடுக்காத வார்த்தையைப் போடக் கூடாது. அப்படியென்றால் நான் 30 ஆயிரம் பணம் கட்ட மாட்டேன் என்று சொன்னேன். இது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

 

நிறைய பேர் அம்மா இருக்கிற வரைக்கும் அம்மா முகத்த நிமிந்துக்கூட பார்த்தது கிடையாது. பாதங்களை மட்டுமே பார்த்து வணங்கி பலன்களை அனுபவித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களுக்கு இவ்வளவு கோபம் தேவையில்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை.

 

எம்.எல்.ஏ. சம்பளம், ஓய்வூதியம் நான் திரும்பித் தர மாட்டேன். அது என் உழைப்புக்கு அரசு கொடுத்த கௌரவம். அ.தி.மு.க. கட்சியில் வவுச்சர் போட்டு காசு வாங்கின மாதிரி சொல்றீங்க. தேர்தல் நேரத்தில் எனக்கு கொடுத்த பணத்துக்கு வவுச்சர் போட்டு கொடுத்தவன் நான். நீங்க யாராவது ரெக்கமன்ட் பண்ணி எனக்கு சீட் கிடைச்சதா? பணமே கட்டாமல் எனக்கு எலெக்சன்ல சீட் கொடுத்தது ஜெயலலிதா. 

 

நீங்க நினைச்சா திடீன்னு அவுங்கள தூக்கி சுமப்பீங்க. வேண்டாம் என்றால் தொப்புன்னு போட்டு, ஸ்டாலின் வழிதான் என் வழி என்று போனீங்கன்னா, எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

 

கரோனா ஆரம்பத்தில் நீங்கள் செய்ததைத் பார்த்து தேர்தலில் 120 சீட்டுக்கு மேலே வரும் என்றார்கள். இப்ப என்ன கணிப்பு இருக்கிறது என்று நீங்கள்தான் பார்த்துக் கொள்ளணும். கணிப்பு மாறிக்கொண்டே இருக்கும். உங்கள் வெற்றி தோல்வி மக்கள் கையில் உள்ளது. 100 ஓட்டில் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள். 10 ஓட்டில் தோற்றவர்களும் இருக்கிறார்கள். 

 

http://onelink.to/nknapp

 

ஒரு ஆன்மீக அரசியலாக, ஒரு கட்சியாக அ.தி.மு.க. இருந்தால், மாறினால் உங்களுக்கு நல்லது. கூட்டணியில் இருக்கிறோம் என்று சொன்னால் நமக்கு நல்லது. இல்ல இல்ல உங்கள சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் காலம் பதில் சொல்லும் 2021. என்ன இருந்தாலும் நீங்கள் என்னுடை அருமை நண்பர் ஜெயக்குமார். டென்ஷன் ஆகாதீங்க. இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.