jayakumar

சென்னையில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இணக்கமாக உள்ளது. கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை. திமுகவுக்கு பிடிக்காத வார்த்தை தேர்தல். பிடித்த வார்த்தை பயம். இந்த இரண்டு வார்த்தைகளும் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தைகள்.

Advertisment

குடியுரிமை சட்டத்திருத்தத்தால் இந்தியாவில் இருப்பவர்களுக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் மசோதாவை ஆதரித்ததாகவும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

Advertisment

மேலும் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவர் 2021ல் கூட கட்சி ஆரம்பிப்பது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார்.