அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக கூட்டணி, ஸ்டாலினை தாக்கி கமல் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்,

அதிமுக தலைமையிலான கூட்டணி என்பது யானை பலம் கொண்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கையை நனவாக்கும் இயக்கம் அதிமுக. யானை பலம் போல் நாங்கள் இருப்பதன் காரணமாக பூனை பலத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டை கிழிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றி கமல்ஹாசன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

Advertisment

jayakumar

கமலை அதிமுக கூட்டணியில் சேர்ப்பீர்களா? என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். திமுக, அமமுக தவிர யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் என்றார்.

Advertisment