Advertisment

மத்திய அரசை கண்மூடித்தனமாக அதிமுக எதிர்க்காது - ஜெயக்குமார் பேட்டி

minister jayakumar

Advertisment

மத்திய அரசை கண்மூடித்தனமாக தமிழக அரசு எதிர்க்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொழிலாளர் நலத்துறை சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், நிலோபர் கபில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம், மக்களவை துணை சபாநாயரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை, இடைக்கால பட்ஜெட் குறித்து கடுமையாக தாக்கி பேசியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

அதற்கு, மத்திய அரசை கண்மூடித்தனமாக அதிமுக எதிர்க்காது. கண்மூடித்தனமாக ஆதரிக்காது. எங்களை பொறுத்தவரை நல்லது செய்தால் பாராட்டுவோம். கெடுதல் செய்தால் எதிர்ப்போம் என கூறினார்.

தமிழக பட்ஜெட் குறித்து கமல் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, கமலுக்கு பட்ஜெட் குறித்து புரியவில்லை என்றால் பொருளாதார நிபுணர்களைக்கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார்.

aiadmk interview jayakumar minister
இதையும் படியுங்கள்
Subscribe