Advertisment

ஜூன் மாதம் 3ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் திமுகவினரால் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு கரோனா பரவல் காரணமாக கலைஞரின் பிறந்தநாளை வீட்டுக்குள்ளேயே கொண்டாட விடும் என ஸ்டாலின் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளார். இந்த சூழலில், நாளை கலைஞரின் பிறந்தநாளையொட்டி அவரின் நினைவிடத்திற்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். அதற்காக அங்கு நடந்துவரும் முன்னேற்பாடுகளை செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.