Minister I. Periyasamy speech at Sports equipment provided event

திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மூலமாக திண்டுக்கல் பிஎஸ்என்எ கல்லூரியில் கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாக்கத்திட்ட அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் விழாவை துவக்கி வைத்தார். திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியும், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இதுபோல தேனியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திண்டுக்கல் பிஎஸ்என்எ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தேசிய அளவில் கத்தி சண்டை போட்டியில் சாதனை படைத்த தமிழ்ச்செல்வி என்ற விளையாட்டு வீராங்கனை, தமிழக முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார். அதன்பின்னர், பேசிய உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது, “சாதனை படைத்த தமிழ்ச்செல்வி எங்களது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமியுடன் இணைந்து நாங்கள் விளையாட்டுத் துறையை மேம்படுத்தி வருகிறோம். விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு அரங்கம், ஆத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் அமைய உள்ளது என்பதை பெருமையோடு சொல்கிறேன்” என்றார்.

Advertisment

Minister I. Periyasamy speech at Sports equipment provided event

அதன்பின்னர் விழாவில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “கல்லூரியில் படித்த ஆசிரியர்கள் பலர் கல்வித்துறையில் சாதனை படைத்து வருகின்றனர். எங்களைப் போன்று விளையாட்டுத் துறையை நேசித்தவர்கள் தான் விளையாட்டுத்துறையிலும், அரசியலிலும் சாதனை படைத்து வருகிறார்கள். குறிப்பாக ஒன்று சொல்ல வேண்டுமென்றால் விளையாட்டுத்துறை என்றால் ஒரு சிறிய துறை தான் என்று தான் நினைத்தார்கள். ஆனால், நம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு இந்தியாவே போற்றும் அளவிற்கு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தினார். அதன்பிறகு சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தமிழகத்தில் சாதனை படைக்கும் அளவிற்கு மகளிர் உட்பட அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்க செய்துள்ளார். பள்ளிப்படிப்பு முதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் உதவித்தொகை கிடைப்பதால் இந்திய அளவில் தமிழகம் கல்வித்துறையில் மேம்பட்டு வருகிறது.

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியதின் பயனாக உலக அளவில் செஸ் வீரர் குகேஷ் சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார். இந்த பெருமை துணை முதல்வரை சாரும். இது தவிர விளையாட்டுத்துறையில சாதனை படைத்த வீரர்களுக்கு அரசுப் பணியில் மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதின் பயனாக கிராமப்புற இளைஞர்களும் விளையாட்டுத்துறையில் சாதனை படைக்க தொடங்கிவிட்டார்கள். தமிழகம் விளையாட்டுத்துறையில் சாதனை படைப்பதை பார்த்து மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு ஒலிம்பிக் போட்டியை நடத்தலாம் என்ற அளவிற்கு அவர்களுக்கு எண்ணத்தை உருவாக்கி உள்ளது. பிரதமரே இதை தெரிவித்துள்ளார். ஒருவேளை மத்திய அரசு நடத்தாவிட்டால் துணை முதல்வர் அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் ஒலிம்பிக் போட்டியை நடத்திவிடுவார் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. தமிழகம் இன்று விளையாட்டு வீரர்களின் பொற்காலமாக மாறி வருகிறது. எவ்வளவோ பணிகள் இருந்தாலும் கிராமப்புற இளைஞர்களை விளையாட்டுத்துறையில் ஊக்குவிப்பதற்காக துணை முதல்வர் இன்று இந்த விழாவை எடுத்து திண்டுக்கல், தேனி ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவித்துள்ளார். வருங்காலத்தில் இன்னும் அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் கிராமப்புறங்களில் இருந்து உருவாகி மாபெரும் சாதனை படைப்பார்கள் இது உறுதி” என்றார்.

Advertisment

Minister I. Periyasamy speech at Sports equipment provided event

அதன்பின்னர் நிறைவுரையாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டி இருந்தது. அலுவல் பணி காரணமாக என்னால் வர இயலவில்லை. காணொளி காட்சி மூலமாக அவர்களுக்கு இந்த விளையாட்டு உபகரணங்களை வழங்கப்பட உள்ளது. விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கு கலைஞரின் பெயரை வைத்ததற்கு காரணம் கலைஞரை போன்ற விடாமுயற்சி, கூட்டாக திட்டமிட்டு விளையாடுவது மற்றும் போராடி வெல்வது குணங்களை கொண்ட கலைஞர் போல் இவர்களும் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பார்கள் என் எண்ணத்தில் தான் இந்த பெயரை வைத்தோம். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கத்தி சண்டை வீராங்கனை தமிழ்ச்செல்வி தமிழகத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார். அவரைப் போல இன்னும் பல வீராங்கனைகள் உருவாக வேண்டும். அதற்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்” என்றார். அதன்பின்னர், ண்டுக்கல்மாவட்டத்தில்உள்ள 305 கிராமஊராட்சிகளுக்கு உள்பட ஒவ்வொரு ஒன்றியத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.