Advertisment

“கலைஞரின் கனவு இல்ல திட்டம் பேரூராட்சிகளுக்கும் மாநகராட்சிகளுக்கும் வழங்கப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Minister I. Periyasamy says Artist's dream home project will be given to Municipalities and Municipal Corporations soon

Advertisment

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெரசாமேரி அருண் சார்பாக அவரது வார்டில் வைக்கப்பட்ட கண்கானிப்பு கேமரா வசதி மற்றும் இ-சேவை மைய திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் தலைமை தாங்கினார். மாநகர துணை மேயர் ச.ராஜப்பா முன்னிலை வகித்தார். மாமன்ற உறுப்பினர் தெரசாமேரிஅருண் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி கண்காணிப்பு கேமராவை திறந்து வைத்த பின்பு அப்பகுதியில் வைக்கப்பட்ட இ.சேவை மையத்தையும் திறந்து வைத்தார்.

அப்போது, திமுக நிர்வாகிகள் மத்தியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, “தி.மு.கவில் கிளைக்கழக நிர்வாகிகள் முதல் மாமன்ற உறுப்பினர்கள் வரை பதவியில் இருப்பவர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு பயன்பெறும் வகையில் சேவை செய்ய வேண்டும். இது போல மற்ற மாமன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என வாழ்த்தினார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுக்கு வீடு வசதி இல்லை என்றும் தங்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் வழங்க வேண்டுமென அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் பேசும்போது, “இந்தியாவே போற்றும் திட்டமான கலைஞரின் கனவு இல்ல திட்டம் முதல் கட்டமாக ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பேரூராட்சிகளுக்கும் மாநகராட்சிகளுக்கும் வழங்கப்படும். அப்போது உங்களுக்கு நிச்சயம் வீடுகள் கிடைக்கும்” என்று கூறினார். அதன் பின்னர் மாமன்ற உறுப்பினர் தெரசாமேரி அருண் வீட்டிற்கு சென்றபோது அப்பகுதி மக்கள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மரத்தினால் செய்யப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவுருவப்படம் பதித்த நாட்காட்டியை வார்டு செயலாளர் பிரிட்டோ வழங்கினார். அவரை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இளைஞர்கள் சுறுசுறுப்புடன் கழகப்பணியாற்றி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற அயராது உழைக்க வேண்டும்” என்றார்.

Advertisment

முன்னதாக மேட்டுப்பட்டிக்கு வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பழம்பெரும்மை வாய்ந்த புனித வியாகுல அன்னை ஆலயத்திற்கு வந்தபோது பெரிய பங்குத்தந்தை செல்வராஜ் மற்றும் உதவி பங்குத்தந்தை அந்தோனிசாமி ஜஸ்டின் ஆகியோர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்ததோடு இறைமக்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு) நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு இறைமக்கள் என்றும் நன்றியுடன் இருப்பார்கள் என கூறினார்கள். அதன்பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு மின்மோட்டார் பொறுத்திய வாகனம் வேண்டுமென மனு கொடுத்தார். உடனடியாக அவருக்கு வாகனம் வழங்க அமைச்சர் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.

நிகழ்ச்சியின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாநகர செயலாளரும், துணைமேயருமான ச.ராஜப்பா, மாநகர அவைத்தலைவர் முகமது இப்ராகிம், துணைச்செயலாளர் அழகர்சாமி, மாவட்ட இலக்கியஅணி அமைப்பாளர் முருகானந்தம், விவசாய அணி அமைப்பாளர் இலகண்ணன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பஜூகுல்ஹக், தெற்கு மண்டல தலைவர் ஜான்பீட்டர், மாநகர பொருளாளர் மீடியா சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் கருப்பட்டி விமலா சேவியர், விஜயா, தெரசா மேரி அருண், வார்டு செயலாளர்கள் பெஞ்சமின் பிரிட்டோ, ஜார்ஜ், செந்தில், உட்பட தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

kalaignar house
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe