Advertisment

 ‘எடப்பாடியின் அரசியல் போராட்ட நாடகம்’  - அமைச்சர் விளாசல்!

Minister Kovi Chezhiyan criticized Edappadi Palaniswami

அண்ணா பல்கலை. மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் செய்துள்ள உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன், “முதலமைச்சராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.

Advertisment

திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார். இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திமுக ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe