ADVERTISEMENT

முதல்வர் உத்தரவை மீறிய அமைச்சர்... அப்செட்டான எடப்பாடி! 

11:59 AM Feb 01, 2020 | Anonymous (not verified)

சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு அமைச்சர்களுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அனைத்து அமைச்சர்களையும் தனித்தனியாக அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிப்ரவரி 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அமைச்சர்களை தனியாக அழைத்து தேவையில்லாத எந்த கருத்துகளையும் பொதுவெளியில் பேச வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கும் அமைச்சர்களை அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றி விடுவேன் என்றும் எச்சரித்து அனுப்பியதாக கூறினர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் சமீபத்தில் கம்பத்தில் ராஜேந்திர பாலாஜி பேசும் போது, தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமாரைத் தாக்க வந்தவர்களை எங்களுக்குத் தடுக்கவும் தெரியும். அவர்களது கைகளை முறிக்கவும் தெரியும். மதக்கலவரம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அமைதி காத்தோம்” என்று பேசினார். இதனால் மீண்டும் எடப்பாடி டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல்வர் எடப்பாடி கட்டுப்பாடு விதித்தும் அமைச்சர் இப்படி பேசி வருவதால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT