/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sakkran.jpg)
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கே. ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண் கள்மேல்நிலைப்பள்ளி ஆகியற்றிற்கு ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டிலான 100 இருக்கைகளை உணவு மற்றும் உண வுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக் கரபாணிவழங்கினார்.
அதன் பின்னர் நிகழ்ச்சியில், அமைச்சர் சக்கரபா ணி பேசியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஒட்டன்சத்திரத்தில் அமைந்துள்ள கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் மாநில நிதி ஆணையம் - பள்ளி உட்கட்டமைப்பு நிதியிலிருந்து தலா ரூ.33.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் ரூ.66.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sakkra.jpg)
இந்த பள்ளிகளில் மாணவ, மாணவிகள் அமர்வதற்கு மேஜைகளுடன் கூடிய அமர் இருக்கைகள் தலா 50 வீதம் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 100 இருக்கைகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதில் நமக்கு நாமே திட்டத்திற்கு தேவையான பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.5.34 இலட்சம் கும்பகோணம் மீயுட்சுவல் பெனி பிட் பண்ட் நிறுவனம் மூலம் செலுத்தப்பட்டு மீதி தொகை ரூ.10.66 இலட்சம் அரசிடம் மானியமாக பெறப்பட்டு, இன்று மொத்தம் 100 அமர் இருக்கைகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர்(பொ) சக்திவேல்,ஒட்டன்ச த்திரம் நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் சுவேதா, வட்டாட்சியர் பழனிச்சாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)