Ministe Mastan addressed press

"நபிகள் நாயகத்தின் வரலாற்றை பாஜக செய்தி தொடர்பாளர் படித்தால் முழு மனிதனாக மாறலாம்" என்று தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சருக்கு தர்கா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தொழுகை நடத்திய அமைச்சர், தர்காவில் பணிபுரியும் 120 பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து நாகூர் தர்காவை புனரமைப்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Advertisment

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர், "நபிகள் நாயகத்தின் வரலாறை படித்தவர்கள் பெரியார், அம்பேத்கர், காமராசர், கலைஞர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள். நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றைப் படித்தால் பாஜக செய்தித் தொடர்பாளர் முழு மனிதனாக மாறமுடியும். மீண்டும் இதுபோல நபிகள் நாயகத்தை பற்றி விமர்சனம் செய்தால், பேரறிஞர் அண்ணா வழியில் எதிர்ப்போம் என்று பாசத்தோடு சொல்லி கொள்கிறேன். 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விடுதலையாக சட்ட வல்லுனர்கள் குழு அமைத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுக மீது வைக்கும் ஊழல் புகார்களை நிரூபித்தால் அதனை எதிர்கொள்வோம்" என்றார்.