M.G.R. He himself admits that Kamal will get the vote only if he says M.G.R name. ” - Chief Minister Palanisamy

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை மக்கள் சேவைக்கு திறந்து வைத்தல் மற்றும் நலத் திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

Advertisment

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக கரோனா தொற்று குறைந்து வருகிறது.மற்ற மாநிலத்தைவிட தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ளது.

Advertisment

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க பரிசிலிக்கப்படும்.ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க பரிசிலிக்கப்படும். கரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். கோதாவரி - காவேரி இணைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகின்றது.

நீர் மேலாண்மை என்பது மிக முக்கியம் எனவே படிபடியாக நிறைவேற்றப்படும். உயிர் சம்மந்தப்பட்டதுஎன்பதால் கரோனா குறைந்த பின் பெற்றோரின் கருத்து கேட்டபின் பள்ளி திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கமலுக்கு தனி செல்வாக்கு இல்லை என்பதால் எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துகிறார். எம்.ஜி.ஆர். பெயரை சொன்னால் தான் கமலுக்கு ஓட்டு கிடைக்கும் என அவரே ஒப்புக்கொள்கிறார்.” என்று தெரிவித்தார்.