Meyyanathan, who was the sitting MLA, won again

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகசிட்டிங் எம்.எல்.ஏ மெய்யநாதனே போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக, காங்கிரஸ் கட்சியிலிருந்து 49 நாட்களுக்கு முன்பு அதிமுகவுக்கு சென்ற தர்ம.தங்கவேலை வேட்பாளராக அறிவித்த நிலையில், வேட்பாளரை மாற்றக் கோரி தொகுதி முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி, பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி வந்தபோது மறியல் செய்தனர்.

Advertisment

அதன் பிறகும் வேட்பாளர் மாற்றப்படவில்லை. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் மெய்யநாதன் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து 23 சுற்றுகளிலும் மற்றும் தபால் வாக்குகளிலும் முன்னிலையில் இருந்தவர், இறுதியில் 25,847 வாக்குகள் வித்தியாசத்தில் மெய்யநாதன் வெற்றி பெற்றார்.

Advertisment

இந்த தொகுதியில் அமமுக வேட்பாளரைவிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

சிவ.வீ.மெய்யநாதன் (திமுக)- 87,935

தர்ம.தங்கவேல் (அதிமுக) - 62,088

திருச்செல்வம் (நாம் தமிழர்)- 15,477

விடங்கர் (அமமுக)- 2,924

வைரவன் (மநீம) - 1,230.