/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CM-AND-EZHILAN.jpg)
தமிழ்நாடு அரசின் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 21.06.2021 அன்று தொடங்கியது. அவையைத்தொடக்கி வைத்துப் பேசிய ஆளுநர், தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும், திட்டங்களையும் விவரித்தார். அதன்பிறகு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், 24ஆம் தேதிவரை கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எழிலன் நாகநாதன் ஆகியோர் தங்களது முதல் உரையை ஆற்றினர். அப்போது ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். தன்னுடைய முதல் சட்டமன்ற பேச்சில் தனது கொள்ளுப்பாட்டி - விடுதலை போராட்ட தியாகி கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார். அதனை நிறைவேற்றும் வகையில், கடலூரில் அவருக்கு சிலை வைக்க அறிவிப்பு வெளியிட்டமுதலமைச்சரைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் நன்றி தெரிவித்தார்.
யாரிந்த அஞ்சலை அம்மாள்?
1890ஆம் ஆண்டில் கடலூர், முதுநகரில் பிறந்த அஞ்சலை அம்மாள், காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் தனது அரசியல் வாழ்வைத் துவங்கினார். 1927ஆம் ஆண்டு கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றுவதற்கான போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்தப் போராட்டத்தில் அவருடன் அவரது ஒன்பது வயது மகளும் கலந்துகொண்டார். இந்தப் போராட்டத்தில் அஞ்சலை அம்மாளும் அவரது மகளும் சிறை சென்றனர். அதேபோல், 1932ஆம் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கர்ப்பிணியான அஞ்சலை அம்மாள் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறைச்சாலையிலேயே குழந்தையையும் பெற்றெடுத்தார். கடலூரைச் சார்ந்த தென்னாட்டு ஜான்சி ராணி என்று மகாத்மா காந்தியால் பாராட்டும் பெற்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)