Advertisment

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுகவில் முட்டி மோதுவது யார்? யார்?

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, திமுகவைச் சேர்ந்த கனிமொழி, அதிமுகவைச் சேர்ந்த மைத்ரேயன், லட்சுமணன், ரத்னவேல், அர்ச்சுனன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

Advertisment

தற்போதைய சூழ்நிலையில் திமுக சார்பில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுக சார்பில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கலாம்.

Advertisment

rajya sabha

அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற தம்பிதுரை, கோகுல இந்திரா, அன்வர்ராஜா, கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் முயற்சித்து வருகின்றனர். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதேபோல் திமுகவில், தொமுச சண்முகம், ஈரோடு முத்துசாமி, கேஎஸ் ராதாகிருஷ்ணன், என்.ஆர். இளங்கோ ஆகியோர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இணைந்த மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது என திமுக உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

admk Rajya Sabha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe