/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/318_4.jpg)
தொடர் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் தமிழக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக என்பது தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இன்று உள்ளது. 31 ஆண்டுக்காலம் தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி செய்தோம். பாஜக என்பது தேசியக் கட்சி. எப்பொழுது அமித்ஷா அல்லது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி போய் பார்க்கவில்லை என்று கூறுகின்றனர். எங்கள் கட்சி வேறு அவர்கள் கட்சி வேறு.
பிரதமர் மோடி ஏதேனும் அரசு விழாக்களுக்கு வந்தால் நான் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவரைச் சந்திப்பேன். அமித்ஷா தனிப்பட்ட முறையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். அவரை ஏன் எடப்பாடி பழனிசாமி சென்று பார்க்கவில்லை என்று கூறுகின்றனர். கேட்டால் நேரம் கொடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இதெல்லாம் தவறான செயல். அவர் மிகப் பெரிய தலைவர். நான் அதிமுக.எங்களுக்குப் பார்ப்பதற்கு வாய்ப்புகள் இருந்தால் சென்று பார்ப்போம். இல்லையென்றால் போய்ப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் அதே போல் தான்.
அதிமுக தலைமையில் 2024ல் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய மெகாகூட்டணி அமைக்கப்படும். தெளிவுபடுத்துகிறேன். அதைத்தேர்தல் வரும்பொழுது தான் சொல்ல முடியும். தினகரன் அறிவிப்பு விடுகிறார். அவருக்கு 1% கூட அதிமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)