
திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுகவை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டத்தை திமுக அறிவித்துள்ளது. அதேபோல் முதல் முறையாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டமானது நடைபெற இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)