Advertisment

சுபிக்‌ஷா இயக்குனர் ஜாமீன்கோரி மனு தாக்கல்

subisha

வங்கி மோசடி வழக்கில் சுபிக்‌ஷா இயக்குனர் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

குஜராத், டெல்லி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் ‘சுபிக்‌ஷா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சுப்பிரமணியன் இருந்துள்ளார். இவர் விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் விஸ்வபிரியா பைனான்ஸ் செக்யூரிட்டி என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தி பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.150 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்காக வங்கிகளில் சுமார் ரூ.700 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் சுப்பிரமணியனை மத்திய அமலாக்க துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை வியாழன்று (மார்ச் 8) விசாரிக்க நீதிபதி சுபா தேவி வழக்கை மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Elderly home St Joseph Action barrier medieval
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe