ramadoss

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? ஆளுனர் ஆட்சியா? என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி 32 நாட்களாகியும், இன்னும் தமிழக ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல...திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தாமதம்!

Advertisment

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுனரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்னதான் மரியாதை? தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா?ஆளுனர் ஆட்சியா? என்ற வினாவுக்கு உடனடியாக விடை காணப்பட வேண்டும்!'' இவ்வாறு கூறியுள்ளார்.