கமல் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Advertisment

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார். அவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Advertisment

vaiko-kamal

இந்த நிலையில் வியாழக்கிழமை கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு வந்தார். பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர். அவர் மீது வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் கலவரத்தை உருவாக்குதல், சட்ட விரோதமாக கூடுவது, பொருட்களை வீசி அவமானம் படுத்துவது, கொலை மிரட்டல் மற்றும் ஆயுதம் வைத்தல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை. ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்திருக்கிறார். கமல்ஹாசன் ஒரு சரித்திர உண்மையை பதிவு செய்தார். அதற்கு செருப்பும், முட்டையும் வீசினார்கள். இது அக்கிரமம் அல்லவா. இதனை ஏன் பாஜக கண்டிக்கவில்லை. அதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு கூறினார்.