‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

MDMK election manifesto release in the name of '24 rights slogan'

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், திருச்சியில் மக்களவைத் தேர்தலுக்கான, ‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (06-04-24) வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கூடவே கூடாது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் உள்ளிட்ட 74 வாக்குறுதிகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, “திருச்சி, புதுக்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் திறக்கப்படும்” என்று கூறினார்.

manifesto mdmk vaiko
இதையும் படியுங்கள்
Subscribe