Advertisment

பெருமாளுக்கு பக்தன்; பெரியாருக்கு பேரன் - துரை வைகோவின் அரசியல்!

mdmk Durai Vaiko's politics full details

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் முன்னணி அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒபந்தம் இறுதிசெய்து தேர்தல் பணிகளில் அதிரடி காட்டி வருகின்றன். அந்த வகையில், தமிழகத்தை ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒத்துக்கப்பட்டுள்ளது. விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் அகிய கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலா 2 இரண்டு தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கும், மற்ற 21 தொகுதிகளில் திமுக 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது.

Advertisment

இந்த நிலையில், இந்த முறை திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சென்றுள்ளது. ஆனால், மதிமுக விருதுநகர் தொகுதியை கேட்டதாகவும், அதற்கு அடுத்த பரிந்துரையில் தான் திருச்சி இருந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக ஒரு எம்.பி தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் திமுக கூட்டணியில் பெற்றநிலையில், இந்த முறை ஒரு எம்.பி தொகுதி மட்டுமே மதிமுக வசம் சென்றுள்ளது. இதற்கு அரசியல் வட்டாரத்தில் சில காரணங்கள் சொல்லப்படுகிறது. திமுகவிடம் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த மதிமுக அழுத்தமாக இரண்டு எம்.பி சீட் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமையோ நிர்பந்திக்காமல், ஒரு தொகுதியை பெறுங்கள், ராஜ்ய சபா தேர்தல் வரும்போது மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என சொல்லி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

mdmk Durai Vaiko's politics full details

இதையடுத்து, முழுமனதுடன் மதிமுக திருச்சியை கேட்டு வாங்கியுள்ளது. தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், திருச்சியில் துரை வைகோ மதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அக்கட்சியின் தொண்டர்கள் தேர்தல் வேலைகளை அதிரடியாக செய்துவருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் திருச்சி சிட்டிங் எம்பி திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் தலைமைக்கு திருப்தியாக இல்லாத காரணத்தால், இந்த முறை மதிமுகவிடம் தொகுதி கைமாறியதாக அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. இதையடுத்து, தேர்தல் தொகுதி ஒப்பந்தம் உறுதியான நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

மேலும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ம.தி.மு.க வேட்பாளர் துரை.வைகோ தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆதரவு கோரி உரையாற்றினார். இந்நிகழ்வில் திருச்சி மாநகர தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, முதன்முறையாக வியாழன் காலை, திருச்சிக்கு வருகைதந்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நேரடியாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சாமி திருக்கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபட்டார்.

mdmk Durai Vaiko's politics full details

அதன்பிறகு, கோவிலுக்கு நேர் எதிரே உள்ள தந்தைபெரியாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியாருக்கு மாலை அணிவித்தபோது விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் துரை வைகோவை திருச்சி மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ம.தி.மு.க.வினர் இப்போதே ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்த நிலையில், துரை வைகோவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாழ்த்துப்பெற வந்தார் திருச்சி வேட்பாளர் தம்பி துரை வையாபுரி. தீயின் பொறி.. திராவிட நெறி.. தேர்தலே வெறி.. திருச்சியே குறி.. நிறைவெற்றி காண்பார் துரை வையாபுரி" எனக் குறிப்பிட்டிருந்தார்.

trichy mdmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe