உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

sathiyamoorthy bhavan congress meeting

இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், மாநில செயற்குழு தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், இன்னாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

sathiyamoorthy bhavan congress meeting

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. அடுத்த மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.விடம் ஒரு எம்.பி. இடத்தை காங்கிரசுக்கு கேட்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.விடம் எத்தனை சதவீத இடஒதுக்கீடு கேட்கலாம். புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சி மேயர் பதவியை கேட்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. அதில் காங்கிரஸ் உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.