தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினியை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக சென்னை கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரின் கார்டனில் உள்ள திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் வீட்டில் மார்க்சிஸ்ட் மற்றும் திமுகவினர் அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பிரச்சாரத்தை துவங்கினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து கே.பாலகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு! (படங்கள்)
Advertisment