பேனா சிலை வைக்க காயத்ரி ரகுராம் ஆதரவு

marina pen statue gayathri raghuram twitter post 

கலைஞரின் நினைவாக வங்கக் கடலில் பேனா சிலை அமைப்பதற்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் கருத்துதெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு வங்கக் கடலில் பேனா நினைவுச்சின்னத்தை எழுப்ப தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான போதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டஒரு தரப்பினர்ஆதரவும், மற்றொரு தரப்பினர்எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் பாஜக பிரமுகரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் வங்கக் கடலில் பேனா சிலை எழுப்புவது தொடர்பாகத்தனது ட்விட்டர்பதிவு ஒன்றில், "மக்களின் பல லட்சம் வரிப் பணம் ஒரு மாநிலத் தலைவரின் இசட் பிரிவுப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும்போது, தமிழ்நாடு மக்களின் வரிப் பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe