Advertisment

அதிமுக அமைச்சருடன் நேரடியாக மோதும் மன்சூர் அலிகான்...

mansoor alikhan to contest election in thondamuthur

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. மேலும், பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர். கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவரும் நிலையில், சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் வேலுமணி, திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான் அண்மையில், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், இந்தக் கட்சிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Mansoor Ali Khan admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe