Advertisment

உதயநிதிக்கு அர்த்தம் கூறிய மம்தா பானர்ஜி! வியந்து பார்த்த திமுகவினர்! 

முன்னாள் முதல்வர் கலைஞர்மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, அவர் மறைந்த நாளான இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கலைஞர் அமர்ந்து எழுத்தோவியம் தீட்டுவது போன்று 6.2 அடி அகலம், 6.5 அடி உயரத்தில், 30 டன் எடையில் நிறுவப்பட்ட வெண்கல சிலையை மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். இந்த சிலைதிறப்பு நிகழ்வை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நாராயணசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அதனையடுத்து ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisment

dmk

இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, தமிழர்கள் புலியை போன்றவர்கள். நீங்கள் உங்கள் மாநிலத்திற்கு குரல் கொடுப்பது பெருமையாக உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் மாநில மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். கலைஞர் கருணாநிதி வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவோம். தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. மாநில உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் கலைஞர். எதிர்காலத்தில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு தற்போது உள்ளது. எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன் தற்போது ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன்.மேலும் முக ஸ்டாலின் மிகவும் புத்திசாலியானவர் . அவரது மகனுக்கு உதயநிதி ஸ்டாலின் என பெயர் வைத்துள்ளார். பெங்காலியில் உதய் என்றால் ரைசிங் என்று அர்த்தம் என கூறினார். அவர் இந்த விளக்கம் கொடுத்த உடன் திமுக கட்சியினர் ஆரவாரத்தை எழுப்பினர். இதில் தி ரைசிங் சன் என்ற பத்திரிக்கையும் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தி வருவது குறிப்படத்தக்கது.

kalaingar mamta banarji stalin statue udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Subscribe