Skip to main content

மத்திய அரசைக் கண்டித்து மம்தா பானர்ஜி போராட்ட அறிவிப்பு

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

 mamata banerjee talks about central government no allocated fund 

 

மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

 

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜியின் அரசுக்கு எதிராக அம்மாநில ஆளுநர் சட்டமன்றத்தை  கூட்டுவதற்கு உரிய காலத்தில் அனுமதி கொடுப்பதில்லை. பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வது போன்ற மாநில அரசுக்கு எதிரான நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

 

இந்நிலையில், மம்தா பானர்ஜி தெரிவிக்கையில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. மேலும், மேற்கு வங்கத்திற்கு என பட்ஜெட்டின் போது எதுவும் ஒதுக்கவில்லை. சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து வரும் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காதலியைச் சுட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்; விசாரணையில் திடுக் தகவல்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
A young man who incident his girlfriend in west bengal

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவரும் நிக்கு குமாரி துபே ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்ஜ் எனும் கெஸ்ட் கவுஸ்ஸில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை 4:30 மணியளவில் ராகேஷ், தனது காதலியான நிக்குவை ரிசப்ஷனில் வைத்து துப்பாக்கியைக் கொண்டு சுட்டார். இதில் நிக்குவின் தொடை பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சுடும் சத்தத்தைக் கேட்ட கெஸ்ட் கவுஸ் ஊழியர்கள் அலறியடித்து, படுகாயமடைந்த நிக்குவை பார்த்தனர். அப்போது, திடீரென்று, ராகேஷ் இருந்த அறையில் இருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது.

உடனடியாக ஊழியர்கள், அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, ராகேஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த நிக்குவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ராகேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராகேஷும், நிக்குவும் ஏழு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த உறவை முறித்துக் கொள்ள நிக்கு விரும்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராகேஷ், நிக்குவை கொலை செய்ய முயற்சி செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

புதிய குற்றவியல் சட்டங்கள்; எதிர்த்தும் ஆதரித்தும் வழக்கறிஞர்கள் மோதல்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
nn

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கம்லா மார்க்கெட் பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக 'பாரதிய நியாய சன்ஹிதா' எனும் புதிய குற்றவியல் சட்ட வழக்கு முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களின் அம்சங்கள்: ஆங்கிலேயக் காலத்து ஐ.பி.சி, சி.ஆர்.பி.சி, ஐ.இ.ஏ சட்டங்களுக்கு மாற்றாகப் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஷ்ய அதிநியம்  உள்ளிட்ட சமஸ்கிருத பெயர்களில் புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்; முதல் நீதிமன்ற விசாரணை நடைபெற்ற நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்; எங்குக் குற்றம் நடந்தாலும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் செய்யலாம்; காவல்துறையிடம் இணைய வழியில் புகார்களைப் பதிவு செய்தல் மற்றும் அழைப்பாணைகளை அனுப்புதல்; குற்றம் நடைபெற்ற இடங்களைக் கட்டாயம் காணொளியாகப் பதிவு செய்தல் வேண்டும்; கொடூர குற்றங்களில் தடயவியல் நிபுணர்கள் குற்றம் நடந்த இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயம்; பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பிற்காக வீடியோ, ஆடியோ மூலம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
 

புதுச்சேரியில் குற்றவியல் சட்டங்களை அம்மாநில முதல்வர் ரங்கசாமி அமல்படுத்தியுள்ளார். இந்நிலையில் மதுரையில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்களின் ஒரு பிரிவு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதேபோல் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு வழக்கறிஞர்கள் குழு போராட்டம் நடத்தி வருகிறது. இதில் இருதரப்பு வழக்கறிஞர்களுக்கிடையே கைகலப்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.