mkstalin -

மேற்கு வங்க மாநிலத்தில், சி.பி.ஐ. நடவடிக்கையை கண்டித்து “தர்ணா போராட்டம்” நடத்தி வரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (4-2-2019) அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

Advertisment

அப்போது, “எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் விதமாகவும் - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்திய கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையிலும் பாசிசப் போக்கை கடைபிடித்து வரும் மத்திய பாசிச பா.ஜ.க அரசை எதிர்த்து தாங்கள் நடத்தி வரும் அறப் போராட்டத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது முழு ஆதரவை அளிக்கிறேன். அத்துடன், மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சியின் எதேச்சாதிகார நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து எதிர்க்கட்சிகளோடு, தி.மு.க.வும் இணைந்து போராடும்.

Advertisment

தங்களை இன்று நேரில் சந்தித்து திமுக சார்பில், தி.மு.க. மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, எம்.பி., ஆதரவு அளித்திட உள்ளார்” என தெரிவித்தார்.