Advertisment

"பொன்ராஜ் - அண்ணா நகர்; சினேகன் - விருகம்பாக்கம்..." வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்!

சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சித்திர ஹோட்டலில் இன்று (10/03/2021) செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

Advertisment

அதன்படி, மதுரவாயல்- பத்ம ப்ரியா, மாதவரம்- ரமேஷ் கொண்டலசாமி, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி- ஃபாசில், எழும்பூர்- பிரியதர்ஷினி, திருப்போரூர்- லாவண்யா, பரமக்குடி- கருப்புராஜ், வில்லிவாக்கம்- முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, அண்ணா நகர்- பொன்ராஜ், விருகம்பாக்கம்- கவிஞர் சினேகன், பெரம்பூர்- பொன்னுசாமி, சைதாப்பேட்டை- சினேகா மோகன்தாஸ், பல்லாவரம்- செந்தில் ஆறுமுகம், தாம்பரம்- சிவ இளங்கோ, காஞ்சிபுரம்- கோபிநாத், ஓசூர்- மசூத், பாலக்கோடு- ராஜசேகர், பென்னாகரம்- ஷகிலா, திருவண்ணாமலை- அருள், செய்யாறு- மயில்வாகணன், ஓமலூர்- சீனிவாசன், மேட்டூர்- அனுஷியா, நாமக்கல்- ஆதம் ஃபரூக், குமாரபாளையம்- காமராஜ், ஈரோடு (கிழக்கு)- ராஜ்குமார், உதகை- சுரேஷ் பாபு, குன்னூர்- ராஜ்குமார், கூடலூர்- பாபு, மேட்டுப்பாளையம்- லட்சுமி, அவிநாசி- வெங்கடேஷ், திருப்பூர் (வடக்கு)- சிவபாலன், திருப்பூர் (தெற்கு)- அனுஷியா ரவி, பல்லடம்- மயில்சாமி, வால்பாறை- செந்தில்ராஜ், பழனி- பூவேந்தன், திண்டுக்கல்- ராஜேந்திரன், அரவக்குறிச்சி- முகம்மது அனீஷ் ஷைல், திருச்சி (கிழக்கு)- வீரசக்தி, திருவெறும்பூர்- முருகானந்தம், முசிறி- கோகுல், துறையூர்- யுவராஜ், குன்னம்- சாதிக் பாட்ஷா, பண்ருட்டி- ஜெயலானி, மயிலாடுதுறை- ரவிச்சந்திரன், நாகை- அனாஸ், விராலிமலை- சரவணன் ராமநாதன், புதுக்கோட்டை- மூர்த்தி, காரைக்குடி- ராஜ்குமார், சோழவந்தான்- யோகநாதன், மதுரை (மேற்கு)- முத்துக்கிருஷ்ணன், ஆண்டிப்பட்டி- குணசேகரன், போடி- கணேஷ், கம்பம்- வேதா வெங்கடேஷ், அருப்புக்கோட்டை- உமாதேவி, மொடக்குறிச்சி- ஆனந்தம் ராஜேஷ், ஈரோடு (மேற்கு)- துரை சேவகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

Advertisment

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன்,பொன்ராஜ்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Kamal Haasan Makkal needhi maiam tn assembly election 2021
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe