"அரசியல் எங்கள் தொழில் இல்லை" - கமல்ஹாசன் பேச்சு!

MAKKAL NEEDHI MAIAM LEADER KAMAL HAASAN ELECTION CAMPAIGN

தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், "அரசியல் எங்கள் தொழில் இல்லை; இந்த வேலையை முடித்து சினிமாவிற்கு செல்வதில் என்ன தவறு? முழு நேர அரசியல்வாதி என யாரும் கிடையாது; என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகதான். நாங்கள் சொல்வதை நகலெடுத்துச் சொல்பவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்களா? ரூபாய் 5 ஆயிரத்திற்கு உங்களை குத்தகை விட்டுவிடாதீர்கள்" எனத் தெரிவித்தார்.

Kamal Haasan Makkal needhi maiam tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe