makkal needhi maiam kamalhaasan tweet

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) காலை தொடங்கியது. இந்த நிலையில்,தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 43 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (12/03/2021) மாலை வெளியிட்டார். அந்தப்பட்டியலில், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஸ்ரீப்ரியா, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் மகேந்திரன் (கட்சியின் துணைத் தலைவர்), கோயம்புத்தூர் (தெற்கு) சட்டமன்றத் தொகுதியில்- கமல்ஹாசன் (கட்சியின் தலைவர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வெற்றியின் விடிவெள்ளி கோவை தெற்கில் முளைக்கிறது. மாநிலம் முழுதும் நம்மவர்களின் வெற்றிக்கு அது கட்டியம் கூறுகிறது. இருண்ட வானம் ஒளிக்குத் தயாராகிறது. தமிழ் மக்களே, நீங்களும் தயார்தானே?" என்று குறிப்பிட்டுள்ளார்.

makkal needhi maiam kamalhaasan tweet

Advertisment

அதேபோல் மற்றொரு ட்விட்டர் பதிவில், "இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் வாழ்வை அவர்களின் மொழியிலேயே படம் பிடித்துக் காட்டியவர். சமூகநீதிக்கான உரையாடல்களில் ஓங்கி ஒலிக்கும் குரல் அவருடையது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.