"தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்" - கமல்ஹாசன் பேச்சு!

MAKKAL NEEDHI MAIAM KAMAL HAASAN SPEECH

சென்னையில் தனியார் தொலைக்காட்சியின் சார்பில் நடைபெற்ற 'தென்னிந்தியாவின் 2021' என்ற நிகழ்ச்சியில், பங்கேற்றுப்பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "ஊழலற்ற ஆட்சியைத் தருவோம்; காந்தி, காமராஜர் போன்றோர் ஏழைகளின் தலைவராக இருந்தனர்; நாங்களும் அப்படித்தான். எம்.எல்.ஏ. ஆனபின் எம்.ஜி.ஆர். சுமார் 50 படங்களில் நடித்தார். சினிமா- தொழில், அரசியல்- நோக்கம். வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். நல்லவர்கள் இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தேன். அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. அரவிந்த் கெஜ்ரிவால் நல்ல முன்னுதாரணம்; தி.மு.க., அ.தி.மு.க.வில் சில நல்லவர்களும் உள்ளனர்" என்றார்.

தேர்தலில் தோற்றால் அரசியலில் இருந்து விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு, "இல்லை" என்று பதிலளித்த கமல்ஹாசன், "எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன்" எனத் தெரிவித்தார்.

Kamal Haasan makkal neethi maiyam tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe