தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் திங்கள்கிழமை சென்னையில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி திங்கள்கிழமை சேப்பாக்கத்தில் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றத்தை நோக்கி புறப்பட தயாராகினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Advertisment

 chepauk

அப்போது பேசிய மாநில ஒருங்கினைப்பாளர் ராஜீ, இவர்கள் எடுக்கும் கணக்கெடுப்பில் சட்ட பாதுகாப்பு கிடையாது. சென்ற ஆண்டை விட கூடுதலாக பெற்றோர் பிறப்பிடம், ஆதார் அட்டை, வாக்களர் அட்டை என ஒட்டுமொத்தமாக கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கின்ற தகவல்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு பயன்படுத்துவோம் என அறிவித்துள்ளது. இது படுமோசமான செயல்.

இந்த கணக்கெடுப்பை அரசு ஊழியர்கள் எடுக்கத் தயங்கினால் மூன்று ஆண்டு சிறை தண்டனை என்று அறிவித்துள்ளனர். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகியவற்றை நாங்கள் அமல்படுத்தமாட்டோம் என 13 மாநிலங்கள் அறிவித்துள்ள நிலையில் தமிழகமும் அறிவிக்க வேண்டும். அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக வலியுறுத்தவேண்டும் என இந்த போரட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.