அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
மாநிலங்களவை உறுப்பினராக மைத்ரேயன் பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் தனது இறுதி உரையில் உருக்கமாக பேசினார். இன்று ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர்”தென்சென்னையில் போட்டியிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதில் எனக்கு வருத்தம் இருக்கிறது” என்றார்.