Advertisment

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்ததன் பின்னணி!

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, 1998- 2017 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் தலைவராக பதவி வகித்த போது, 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

congress

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி 2017- ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அந்த காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுலே மீண்டும் தலைவர் பதவியை வகிக்க வேண்டும் என்று ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ராகுல் தனது முடிவில் பின் வாங்காமல் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பின்பு காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவரை தேர்ந்த்தெடுத்து சொல்லுங்கள் என்று ராகுலுடன் சோனியா காந்தியும் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் செயற்குழு கூட்டத்தில் கூடி கலந்து ஆலோசித்தர்கள். முடிவுக்கு பிறகு, கூட்டம் முடிந்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சோனியா காந்தி காங்கிரசின் புதிய தலைவர் என்பதனை அறிவித்தார். இதனால் தொண்டர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்தனர். ஏனென்றால் சோனியா தலைவராக இருந்த போது காங்கிரஸ் தொடர்ந்து 10ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ் வலிமை பெரும் என்று தொண்டர்கள் கருதுவதாக சொல்லப்படுகிறது.

ragulganthi soniyagandhi congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe