Skip to main content

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்ததன் பின்னணி!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, 1998- 2017 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் தலைவராக பதவி வகித்த போது, 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

congressஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி 2017- ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அந்த காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுலே மீண்டும் தலைவர் பதவியை வகிக்க வேண்டும் என்று ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ராகுல் தனது முடிவில் பின் வாங்காமல் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பின்பு காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவரை தேர்ந்த்தெடுத்து சொல்லுங்கள் என்று  ராகுலுடன் சோனியா காந்தியும் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.   


இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் செயற்குழு கூட்டத்தில் கூடி கலந்து ஆலோசித்தர்கள். முடிவுக்கு பிறகு, கூட்டம் முடிந்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சோனியா காந்தி காங்கிரசின் புதிய தலைவர் என்பதனை அறிவித்தார். இதனால் தொண்டர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்தனர். ஏனென்றால் சோனியா தலைவராக இருந்த போது காங்கிரஸ் தொடர்ந்து 10ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ் வலிமை பெரும் என்று தொண்டர்கள் கருதுவதாக சொல்லப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமிதாப் பச்சனுக்கு காங்கிரஸ் நோட்டிஸ்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Kalki 2898 AD: Legal notice served to amitabh bachan for allegedly hurting Hindu sentiments

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

பிரம்மாண்டமாகவும், ஏராளமான பொருட்செலவிலும் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மகாபாரத குருசேத்திர போருக்கு பிறகு மகாபாரத கதாபாத்திரமான அஸ்வத்தாமன் எதற்காக உயிரோடு இருக்கிறார் என்பது பற்றியும், கலிகாலம் தொடங்கி 6000 வருடங்களுக்குப் பிறகும் உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும், கல்கி முதல் பாகத்தில் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக தெரிவித்து இயக்குநர் நாக் அஸ்வின், பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மடாதிபதி ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் என்பவர் நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில், “இந்தியா என்பது உணர்வுகள், நம்பிக்கை மற்றும் பக்தி நிறைந்த நாடு. சனாதான தர்மத்தின் மதிப்புகளை சிதைக்கக் கூடாது. அதன் வேதங்களை மாற்றக்கூடாது. கல்கி நாராயணன் நம் நம்பிக்கையின் மையத்தில் இருக்கிறார். இவர் விஷ்ணுவின் இறுதி அவதாரமாகக் கருதப்படுகிறார்.

புராணங்களில் கல்கியின் அவதாரம் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் பிரதமர் மோடி பிப்ரவரி 19 அன்று ஸ்ரீ கல்கி தாமுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த படம் நமது வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக இருக்கிறது. இந்தப் படம் நமது மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது. எனவே, நாங்கள் சில ஆட்சேபனைகளைக் குறிப்பிட்டுள்ளோம் மற்றும் பதிலுக்காக காத்திருக்கிறோம். இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடுவது சினிமாக்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகிவிட்டது. துறவிகள் பேய்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்பது எங்கள் நம்பிக்கையுடன் விளையாடலாம் என்று அர்த்தமல்ல” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

நீட் தேர்வு விவகாரம்; காங்கிரஸ் - திமுக முக்கிய முடிவு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
NEET Exam Issue; Congress - DMK important result

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22.07.2024) தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23.07.24) தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவகாரம், நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்பனை ஆகியவை குறித்தும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையில் எழுப்ப உள்ளனர்.  அதன்படி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் இன்றைய கேள்வி நேரத்தில் எழுப்ப உள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.