2011-15 கால கட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக அவரது நண்பர் கணேஷ்குமார் மத்திய குற்றப்பிரிவில் புகார் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் சென்னை போலீசார் கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாததால் அவரின் தந்தை வேலுச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். திருவண்ணாமலையிலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அவருடைய தம்பி அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் வீட்டில் சொத்து ஆவணங்கள், நகைகள், லேப்டாப், வங்கி காசோலைகள், வங்கிக் கணக்குகள், வங்கி இருப்பு பெட்டக சாவிகளும் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன. மேலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுயவிவர குறிப்புகள் அடங்கிய பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 9 இடங்களிலும், திருவண்ணாமலையில் 2 இடங்களிலும், கரூரில் 5 இடங்களிலும், கும்பகோணத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசும் போது, தற்போது நடைபெற்ற சோதனைக்கும் எனக்கும் என் தம்பிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இது குறித்த உண்மையை கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளிவந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே முடிந்து போன எனது வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து வருகின்றனர். இதில் என்னிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருக்குமா? என்று தேடி வருகின்றனர். அதோடு சென்னையில் இருக்கும் எனது இல்லம் பூட்டி உள்ளது. கரூரில் இருக்கும் ஜவுளி நிறுவனம் பூட்டி உள்ளது. கரூரில் இருக்கும் எனது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் நான் இல்லாததை அறிந்து எனது தாயார் மற்றும் தந்தையரை தொந்தரவு செய்துள்ளனர். வீட்டிலும் சோதனை நடத்தி வந்துள்ளனர். இது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதை தடுக்க இப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அரசும், அரசு இயந்திரமும் முழு வேகத்துடன் செயல்பட்டு வருகிறது என்று அதிரடியாக தெரிவித்தார். மேலும் இந்த விசாரணை தொடர்பாக முன்ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.