கடந்த வாரத்தில் தங்க தமிழ்செல்வன் தினகரனின் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தினகரன் கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் மேலும் சரிவை அக்கட்சி கண்டுள்ளது.

Advertisment

ttv

அமமுகவில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவதைப் பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது தினகரன் கட்சியில் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்று குற்றம் சொல்கின்றனர்.தினகரன் தரப்பில் இது பற்றி கூறும் போது, நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அமமுக தோல்வி அடைந்ததால் எதிர்காலம் இல்லை என்று நினைத்துக்கொண்டு செல்கிறார்கள். மேலும் வேறு கட்சியில் இணைவதால் பதவி மற்றும் பணம் கிடைக்கும் என்று பேராசையில் செல்கின்றனர் என்று தெரிவிக்கின்றனர். இப்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி புகார் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.