தி.மு.க. தலைமையிலான இந்தப் பேரணியில் தனது மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளும் என்று அறிவித்திருந்த கமல், கடைசி நேரத்தில் பின்வாங்கியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலைப் பொறுத்தவரை இந்த பேரணியில் தங்கள் கட்சியும் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஆரம்பத்தில் இருந்தது என்கின்றனர். ஏனென்றால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்ளபடியே எதிர்க்கும் மனநிலையைக் கொண்டிருந்தார் கமல். அதனால்தான், இந்தக் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தையும் நேரில் சென்று வாழ்த்தி ஆதரவையும் அவர் தெரிவித்தார். இதையெல்லாம் கவனித்து தான் தி.மு.க. தலைமை, முறைப்படி கமலுக்கும் அவர் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் பேரணிக்கான அழைப்பை அனுப்பியது என்கின்றனர். பேரணி விவகாரத்தைக் கூர்ந்து கவனித்து கொண்டு இருந்த டெல்லி பா.ஜ.க.வோ, தி.மு.க. கூட்டணி நடத்தும் பேரணியில், அந்தக் கூட்டணியில் இல்லாத கமலின் மக்கள் நீதி மய்யமும் கலந்துக்கிட்டால், அதற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்து விடும் என்று நினைத்தது. உடனே, ஆர்.எஸ்.எஸ். வழியாக ஆடிட்டர் குருமூர்த்தியை விட்டு கமலிடம் பேச வைத்தனர் என்கின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
குருமூர்த்தியும், கமலிடம், நீங்கள் எதற்கு அவர்களுடன் சேர்ந்து அந்தப் பேரணிக்குப் போகணும்? உங்க தனித்தன்மை அந்தப் பேரணியில் காணாமல் போயிடாதான்னு கூறியுள்ளார். இந்த நிலையில், ரஜினியும் கமலும் இணைந்து அரசியல் செய்யப் போகிறதாக தகவல் சொல்லிவருவதால் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணியில் கமல் எதுக்குக் கலந்துக்கணும்? அப்படிக் கலந்துக்கிட்டா அது தி.மு.க.வுக்கு தான் லாபமா அமையும்; ம.நீ.ம. கட்சிக்கு எந்த லாபமும் அதனால் ஏற்படாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதோட திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணியை எதிர் காலத்தில் உருவாக்குவதற்கும் இடைஞ்சலாத்தான் அமையும் என்று கூறியுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் விருப்பம் இல்லைன்னா, தனியாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தலாம் என்று ரஜினி தரப்பிலிருந்தும் கமலிடம் சிக்னல் காட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் கமல், தி.மு.க. பேரணியில் கலந்து கொள்ளும் முடிவிலிருந்து ஒதுங்கி கொண்டார் என்கின்றனர்.