Skip to main content

மு.க.அழகிரி கேட்ட முக்கிய கேள்வி! பதிலில் கலக்கிய விசுவாசிகள்! -‘அட்றா சக்க’ ஆலோசனைக் கூட்டம்!

Published on 24/08/2018 | Edited on 24/08/2018
az

 

நேஷனல் கணேசன், சின்னராஜ், தேவராஜ் போன்ற முன்னாள் திமுக நிர்வாகிகள் விருதுநகரிலிருந்து மதுரை சென்று மு.க.அழகிரி இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.  

 

ஆலோசனை எப்படி நடந்ததாம்? பிரதான கேள்வி என்னவாம்? 

 

“யப்பா.. உங்க ஊர்ல இருந்து எத்தனை (பஸ்) வண்டி?” என்று அண்ணன் கேட்க, “அண்ணே.. அதுவந்து.. ஒரு ரெண்டு மூணு வண்டில  ஆட்களோட (தொண்டர்கள்) நாலாம் தேதி இங்கயிருந்து கிளம்பி அஞ்சாம் தேதி சென்னை வந்திருவோம். பேரணில கலந்துக்குவோம். சென்னையைக் கலக்கிருவோம்ணே.” ஒருவர் பதில் சொல்லி முடிக்க,   “அடுத்து.. யப்பா உங்க ஊர்ல இருந்து……” இப்படித்தான் அண்ணன் கேட்க, நாங்கள்லாம் அத்தனை வண்டி.. இத்தனை வண்டின்னு சொல்லிட்டி வந்திருக்கோம்.” என்றார்கள் மு.க.அழகிரி ஆதரவாளர்கள். 

 

அமுதன்

anbumani

 

‘விருதுநகர் மாவட்டத்தில் பேருந்துகளில் நிரப்பும் அளவுக்கு அழகிரி ஆதரவாளர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டபோது “ஆளுக்கா பஞ்சம்? ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு சம்பளம் 500 ரூபாய். அப்புறம் சாப்பாடு,  அது இதுன்னு செலவு நெறய இருக்கு. சென்னைல ஸ்ட்ரெங்த் காட்ட வேண்டாமா?” என்றார்கள் வெளிப்படையாக. 


அழகிரி விசுவாசிகளின் விஸ்வரூப நம்பிக்கையாக இருப்பது என்ன தெரியுமா? “எப்படியும் அண்ணன் ரஜினி கூட கூட்டு வச்சிருவாரு. அவரு நடந்துக்கிறத பார்த்தாலே தெரியுது.” என்கிறார்கள். 

 

நேஷனல் கணேசன்

 

ன்

 

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆரால் ஓரம்கட்டப்பட்ட திமுக நிர்வாகிகள் அத்தனைபேருமே அழகிரி ஆதரவாளர்களாக இங்கே பார்க்கப்படுகிறார்கள். அந்த வகையில், அண்ணா காலத்து சீனியரான, முன்னாள் திமுக மாநில இலக்கிய அணி செயலாளர் அமுதனுக்கெல்லாம், 4-ஆம் தேதி ரயிலுக்கு, இப்போதே முன்பதிவு செய்துவிட்டது அழகிரி தரப்பு. 

 

அரசியலில் (பண)பலம் காட்ட வேண்டியது மு.க.அழகிரிக்கும் அவசியமாகிப்போனது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக கூட்டணி வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்த அழகிரி ஆதரவாளர்! 

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

Alagiri supporter who made the DMK alliance candidate lose the deposit!

 

தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128 நகராட்சிகளிலும், அதிமுக 6 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 489 பேரூராட்சிகளில், திமுக கூட்டணி 358 பேரூராட்சிகளிலும், அதிமுக 24 பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 

 

அதேபோல், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 26 வார்டுகளில் திமுகவும், 7 வார்டுகளில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், மதுரை 47வது வார்டில் அழகிரியின் தீவிர ஆதரவாளர் முபாரக் என்பவரின் மனைவி பானு சுயேட்சையாக போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர், 4,561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மேகளா மற்றும் அதிமுக வேட்பாளர் ரூபினி ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.    

 


 

Next Story

பழையபடி ஆரம்பிச்சுடாய்ங்கப்பா... மதுரையில் சர்ச்சை போஸ்டர்

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

புலம்பும் திமுக உடன்பிறப்புகள் மதுரையில் எப்பவுமே வித விதமான வாசகங்களில் போஸ்டர் அடிப்பதில் அசத்துவர்கள் அழகிரி விசுவாசிகள் அது சிலநேரம்  வேடிக்கையாகவும் இருக்கும் அதே சமயத்தில் கட்சிக்குள் பெரிய கிளேபாரத்தையும் ஏற்படுத்திவந்த நிலையில் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணனுக்கே முடிசூட்டவேண்டும் என்று பொருள்படும் வாக்கியங்களோடு ஒட்டபட்ட போஸ்டரால்  திமுகவுக்குள் ஸ்டாலின் அழகிரி விரிசல் பெருசானது. அடுத்தடுத்து நடந்த விசயம் ஊரரிந்தது.

 

controversy poster in Madurai


தற்போது முழுவதுமாக ஒதுங்கி தன் பிறந்தநாளை கூட யாரும் வரவேண்டாம் என்ற நோக்கில் மதுரையில் இல்லாமல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். எப்பவும் விமானநிலையத்தில் அடிக்கடி பேட்டி கொடுப்பதை நிறுத்தி கொண்ட அழகிரி தற்போது உடல்நிலை சரியில்லாமல் ஓய்வு எடுத்துவந்த நிலையில் செல்லூர் அழகிரியின் தீவிர ஆதரவாளர் நாகூர் கனி மற்றும் ஆதரவாளர்களால் அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே பாடல் வரிகள் போல அண்ணே அண்ணே அழகிரி அண்ணே நம்ம கட்சி நல்ல கட்சி இப்ப ரொம்ப கெட்டுபோச்சுண்ணே என்று கிண்டல் அடிக்கும் நோக்கில் போஸ்டர் மதுரை எங்கும் ஒட்டியுள்ளது மீண்டும் திமுக வினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.