Advertisment

டாஸ்மாக்கை எதிர்த்தவர்கள் ஊறுகாய் போல் அதிமுகவுடன் இணைந்துள்ளனர் - அப்ஸரா

புதுச்சேரி மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கத்தையும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனையும் ஆதரித்து அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்ஸராரெட்டி, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisment

 Mahila Congress General Secretary  apsara commented admk pmk alliance

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அப்போது பேசிய அவர், "திருநங்கையான எனக்கு முகவரி கொடுத்தவர் ராகுல்காந்தி. டாஸ்மாக்கை எதிர்த்தவர்கள் தற்பொழுது ஊறுகாய் போல் அதிமுகவுடன் இணைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவில் 8 லட்சம் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்று குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்ஸரா, "மதவாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெண்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை. துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை முழுக்க அரசியல் சாயம் பூசப்பட்டது. இந்தத் தேர்தலுக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி காணாமல் போவார்" என கூறினார்.

apsara reddy congress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe