Advertisment

தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் காரணமாக கட்சி சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று, சென்னை கொட்டிவாக்கம் 181வது வார்டில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில், இரண்டு சிறுவர்கள் மகாத்மா காந்தி மற்றும் பாரத மாதா போல் வேடமணிந்த நபர்களுடன் சென்று வாக்கு சேகரித்தனர்.