ADVERTISEMENT

மகாராஷ்டிரா அரசியல்; குழப்பத்தில் ஓபிஎஸ், குஷியில் இபிஎஸ்

08:34 AM Feb 21, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே 40 சிவசேனா எம்.எல்.ஏக்களுடன் கட்சியில் இருந்து பிரிந்து சிவசேனா கட்சிக்கு உரிமை கோரினார். மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். மேலும் சின்னத்திற்கும் சிவசேனாவின் இரு அணிகளும் உரிமை கோரிய நிலையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சிவசேனா கட்சியின் உரிமையையும், சின்னத்திற்கான உரிமையையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

மகாராஷ்டிரத்தில் 2019ல் தேர்தல் நடைபெற்றது. இதில் சிவசேனா கட்சி 55 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியை பிடித்தது. இதில் சிவசேனை கட்சி எம்.எல்.ஏக்கள் பெற்ற மொத்த வாக்குகளில் 76% வாக்குகள் பெற்ற எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருக்கின்றனர். 23.5% வாக்குகள் பெற்றவர்கள் உத்தவ் தாக்கரே அணியில் இருக்கின்றனர். இதனால் பெரும்பான்மை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவிற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகளே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. தோல்வி அடைந்த வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுகவும் இரு அணிகளாக செயல்படுவதால் ஓபிஎஸ் மேலும் குழப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு இபிஎஸ் தரப்பிற்கு உற்சாகத்தை கொடுக்கும். மேலும், அதிமுகவில் ஏற்பட்டது பிளவு அல்ல. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரான முடிவுகளுக்கு எதிராகத்தான் ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT