விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், மராட்டிய அரசியலில் ஜனநாயகத்தின் ஈரல்குலை பிடுங்கப்பட்பிருப்பதாக குற்றம் சாட்டினார். சிவசேனா, பாஜக, தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் அங்கு சந்தர்ப்பவாத அரசியலை செய்வதாகவும், எனவே அங்கு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது தான் தீர்வாக இருக்கும் என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/THAMIMUN ANSARI_9.jpg)
பாலில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், இது குறித்து வந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ரஜினி - கமல் இணைவு குறித்து கூறுகையில், 3 மணி நேரம் ஓடும் சினிமாவில் செயற்கையாகவே ஒருங்கிணைந்து நடிப்பதில் ஈகோ காட்டி பிரிந்தவர்கள், அரசியலில் இணைவது சாத்தியமில்லை என்றார்.
இலங்கை தேர்தல் முடிவு குறித்து கூறுகையில் புதிய அதிபர் கோத்தபய ராஜேபக்ஷேவும், பிரதமர் மஹிந்த ராஜேபக்ஷேவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மொழி மற்றும் மத சிறுபான்மையினரை அரவணைக்க வேண்டும். அங்கு தமிழர் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய படையினரை ரோந்து பணியில் ஈடுபட செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.
Follow Us