ADVERTISEMENT

"ஒருவர் சாவர்க்கராக இருப்பதற்கு தியாகம் செய்ய வேண்டும்" - துணை முதல்வர்

11:54 AM Apr 05, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்த எனது பேச்சுகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் நீக்கப்பட்டுவிட்டன. நாடாளுமன்றத்தில் என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை" என்றார். இதனைத் தொடர்ந்து உங்களின் பேச்சுக்கு பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், “எனது பெயர் சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி.. காந்தி ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டான்” என்றார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற சவர்க்கார் கவுரவ பேரணியை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், "சாவர்க்கரை இழிவுபடுத்துவது என்பது அவரது அந்தஸ்தை குறைக்கவில்லை. இதன் மூலம் அவரை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லும் வாய்ப்பை பெற்றோம். ஒவ்வொரு வீட்டிற்கும் உண்மையை எடுத்துச் செல்ல எங்களுக்கு வாய்ப்பளித்த ராகுல் காந்திக்கும், சாவர்க்கருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். இதனை ராகுல் காந்தி தொடர வேண்டும்" என்று பேசினார்.

மேலும் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், "மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் சாவர்க்கர் இல்லை என்று ராகுல் காந்தி கூறுகிறார். நீங்கள் சாவர்க்கராகவோ, காந்தியாகவோ இருக்க முடியாது. ஒருவர் சாவர்க்கராக இருப்பதற்கு தியாகம் செய்ய வேண்டும். அந்தமான் சிறையில் நம் கழிப்பறை அளவு மட்டுமே உள்ள அறையில் சாவர்க்கார் அடைத்து வைக்கப்பட்டார். அந்த அறை முழுவதும் இருட்டாக இருந்தது. ஒரு நாள் இரவு மட்டும் அந்த அறையில் ராகுல் காந்தி தங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்காக அந்த அறையில், நாங்கள் ஏசியை கூட வைத்து தருகிறோம். ஆனால் உங்களால் அது முடியாது" என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT