ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் வேட்பாளர் யார்? அதிமுகவில் நடக்கும் குடுமிபிடி சண்டை!

10:13 AM Apr 23, 2019 | annal

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மே-19ம் தேதி என்று அறிவித்திருக்கும் நிலையில், திமுகவும் அமமுகவும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். திமுக சார்பில் டாக்டர் சரவணனும், அமமுக சார்பில் மகேந்திரனும் தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

ADVERTISEMENT



இந்நிலையில் ஆளுங்கட்சியான அதிமுகவில் யார் வேட்பாளர் என்று அறிவிப்பதற்கு குடுமிபிடி சண்டை நடக்கிறது. இது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பதில் அமைச்சர்களிடையே இதே போன்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடைசியில்தான் அறிவித்தார்கள்.


தற்போது மதுரை முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், தனக்கு திருப்பரங்குன்றம் தொகுதியை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்த, மதுரை அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் இருவரும் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர் என்கிறார்கள்.



மேலும் இந்த விவகாரம் குறித்து அதிமுக தரப்பு சொல்வதாவது: செல்லூர்ராஜூ, தன ஆதரவாளர்களான சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், சோலைராஜா, கிரம்மர் சுரேஷ் ஆகிய மூவரில் ஒருவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்த, ராஜன்செல்லப்பா, தனது உதவியாளரான வக்கீல் ரமேஷ்க்கு சீட் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க, செல்லூராஜூவோ ஏற்கனவே ராஜன் செல்லப்பாவின் மகனுக்கு எம்.பி. சீட் கொடுத்துள்ளதால், மீண்டும் அவரின் சிபாரிசை ஏற்கக்கூடாது என்று கூறிவருகிறார்.


இதற்கிடையில் மறைந்த முன்னாள் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸின் மகனுக்கு சீட் கொடுக்கும்படி ஒரு தரப்பினர் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் உதயகுமார், எனது ஆதரவாளருக்கு சீட் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. போஸ் மகனுக்கு சீட் கொடுத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மற்ற யாருக்கும் கொடுத்தால் நான் பிரச்சனை செய்வேன் என்று ஆவேசம் அடைந்துள்ளார்.

முன்னாள் திருமங்களம் எம்.எல்.ஏ முத்துராமலிங்கத்துக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சிபாரிசு செய்துள்ளாரார். முத்துராமலிங்கத்திற்கு சீட் கொடுக்க கூடாது என்று செல்லூராஜூ, உதயகுமார் இருவரும் தீவிரமாக எதிர்க்கின்றனர். இந்த குடுமிபிடி சண்டையால் எடப்பாடி ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்.

இந்த பிரச்சனைக்கு இடையில், நத்தம் விஸ்வநாதம் தனக்கு சீட் கொடுங்க. ஜெயித்துக்காட்டுகிறேன் என்று பிடிவாதமாக நிற்கிறார். திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட் கொடுத்தாலும் உட்கட்சி பூசலால் தொகுதியில் வேலை செய்யாமல் விட்டுவிடுவார்களே என்று எடப்பாடி எரிச்சலில் இருப்பதாகவும், இந்த விவகாரத்தால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கிறார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT