மதிமுக தலைவர் வைகோவிற்கு அரசியலில் ராசி இல்லை, அவர் எந்த கூட்டணிக்கு சென்றாலும் அந்த கூட்டணி தோற்றுவிடுகிறது என பல் மீம்ஸ்கள் வந்தன.
தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மதுரையில் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டினர். இதில், வைகோவின் ராசி எப்படி என கேள்வி எழுப்பி, அதன்கீழ் தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை கலைஞரின் தம்பிக்கு ராசி முக்கியமில்லை. கொள்கையும், வெற்றியும்தான் முக்கியம் என அச்சிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வைகோவை கேலி செய்தவர்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.